தொப்புளுக்கு டூப் ... இயக்குநர் சற்குணம் மீது நடிகை நஸ்ரியா புகார்!
நேரம் நல்லாருந்தா எருமை கூட ஏரோப்ளேன் கேட்கும் என்பது
போலாகிவிட்டது, ஹீரோயின்கள் கதை.
நேரம் படத்தில் அறிமுகமாகி, இன்று அத்தனை இளம் ஹீரோக்களும் கேட்கும்
நடிகையாகிவிட்ட நஸ்ரியா, இயக்குநர் சற்குணம் மீது நடிகர் சங்கத்தில் புகார்
அளித்துள்ளார்.
நய்யாண்டி படத்தில் தனது இடுப்பை அனுமதியின்றி படமாக்கிவிட்டதாக தன்
புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா.
இந்தப் படத்தை களவாணி, வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்குகிறார். விரைவில்
இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் சற்குணம் மீது நடிகர் சங்கத்தில் பரபரப்பாக புகார் வாசித்துள்ளார் நஸ்ரியா.
படத்தில் நஸ்ரியாவின் இடுப்பும் தொப்புளும் பளிச்சென்று தெரியும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளதாம்.
இந்தக் காட்சியில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டாராம் நஸ்ரியா.
எனவே நஸ்ரியாவுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் தொப்புளை படமாக்கி, அதை நஸ்ரியா தலையுடன் சேர்த்து விட்டாராம் இயக்குநர்.
தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது
முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக
சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் புகார் கூறியுள்ளார் நஸ்ரியா.
No comments:
Post a Comment