Thursday, October 3, 2013

தோழியை காப்பாற்ற சென்று வாய்க்கால் நீரில் சிக்கிய பள்ளி சிறுமி சடலமாக மீட்பு - www.tnfinds.com - Best site in the world

தோழியை காப்பாற்ற சென்று வாய்க்கால் நீரில் சிக்கிய பள்ளி சிறுமி சடலமாக மீட்பு

இடைப்பாடி: வாய்க்காலில் விழுந்த தோழியை காப்பாற்ற குதித்த பள்ளி சிறுமி நீரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவரது சடலம் 2 நாட்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது.
இடைப்பாடி அருகே தேவூர் புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகள் தங்கம்(14). இவர் குமாரபாளையத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், பக்கத்து வீட்டு சிறுமி நிர்மலாவுடன் கடந்த 25ம் தேதி இடைப்பாடி அருகே உப்புபள்ளம் வாய்க்காலில் துணி துவைக்க சென்றார். துணி துவைத்து விட்டு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நிர்மலா நிலைதடுமாறி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற தங்கம் வாய்க்காலில் குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் நீரில் சிக்கி அடித்து செல்லப்பட்டார்.
நிர்மாலாவிற்கு ஓரளவிற்கு நீச்சல் தெரியும் என்பதால் கரைக்கு வந்து விட்டார். நீரில் அடித்து செல்லப்பட்ட தங்கத்தை பெற்றோரும் அருகில் இருந்தவர்களும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. கடந்த 2 நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று மதியம் அவரது சடலம் வாய்க்கால் ஓரம் ஒதுங்கியது.
சடலத்தை மீட்ட தேவூர் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

More News Click Here 

No comments: