அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சோனியா திட்டவட்டம்
டெல்லி: அரசியலில் இருந்து 2016ஆம் ஆண்டு ஓய்வு பெறப் போவதாக வெளியான
செய்திகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அண்மையில் 24 அக்பர் சாலை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ்
தலைவர் சோனியாகாந்தி 2016-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று
குறிப்பிட்டு இருந்தது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் அவர் தெரிவித்துவிட்டதாகவும்
செய்தி பரவியது. ஆனால் இந்த செய்திக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மறுப்பு
தெரிவித்தனர்.
இந்த நிலையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் காங்கிரஸ் தலைவர்
சோனியாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய பஸ்வான், 2016-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு
பெறப்போவதாக தான் கூறவில்லை என்றும், அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம்
இல்லை என்றும் சோனியா காந்தி என்னிடம் தெரிவித்தார்.
2004-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலைப் போன்று வரும் லோக்சபா தேர்தலிலும் மத
சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சோனியாவிடம்
வற்புறுத்தினேன் என்றார்.
No comments:
Post a Comment