Monday, October 7, 2013

மருந்துநிறுவனத்திற்கு எதிர்ப்பு: மக்கள் போராட்டம் - www.tnfinds.com - Best site in the World

மருந்துநிறுவனத்திற்கு எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு அருகே மத்திய அரசின் நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் சாலை மறியல் செய்தனர்
கல்பாக்கம், செங்கல்பட்டு சாலையில் நடந்த மறியலின்போது மத்திய அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.
தடையை மீறி மறியல் செய்தவர்களை தடுக்க முயன்றபோது, காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியல் காரணமாக அந்தப்பகுதியில் ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதனால் அங்கு சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலரிப்பாக்கம் கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பில் 595 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கட்டுமான பணிகள் பலகட்ட எதிர்ப்புகளால் நிறுத்தப்பட்டு மீண்டும் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டால் தங்கள் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

 


No comments: