Monday, October 7, 2013

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. மாநாடு விஜயகாந்த் அறிவிப்பு - www.tnfinds.com - Best site in the World


பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய
உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க. மாநாடு
விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை, அக்.7- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய உளுந்தூர்பேட்டையில் விரைவில் தே.மு.தி.க. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தொண்டர்களிடம் கருத்து கேட்டு, யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிக்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சிதமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., 29 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. ஆனால், அதன்பின்னர், அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது. பின்னர், புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் களம் இறங்கிய தே.மு.தி.க. 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று, டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, டிசம்பர் 4-ந்தேதி நடைபெறவுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனாலும், பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தல் முன்உதாரணமாக இருக்கும் என்று கருதுவதால், அனைத்து கட்சிகளும் இதில் முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் விருப்பம்தே.மு.தி.க.வை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் யாருடனும் கூட்டணியில் இல்லை. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதை நிரூபிக்கும் வகையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளின்போது, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் கூட்டணி குறித்து கேட்டால், ‘‘தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி பற்றி பார்த்துக்கொள்ளலாம்’’ என்றே கூறிவந்தார். விஜயகாந்துக்கு அதிகாரம்இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த தே.மு.தி.க. செயற்குழு கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர், மதுரையில் கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், ‘‘பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை செயற்குழு எனக்கு வழங்கியுள்ளது. ஆனாலும், தொண்டர்களிடம் கேட்டுத்தான் முடிவு செய்வேன். விரைவில் தே.மு.தி.க. மாநாடு நடத்தப்படும். அப்போது, தொண்டர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்’’ என்று கூறினார். இந்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் விரைவில் தே.மு.தி.க. மாநாடு நடத்தப்படும் என்று கட்சி தலைமை நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தே.மு.தி.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உளுந்தூர்பேட்டையில்...தே.மு.தி.க. சார்பில் மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள உ.கீரனூரில் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர் கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொள்வார்கள். மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


More News Click here........... 

 

Hot HD photos click here.... 

No comments: