தேசிய உரிமை இயக்கத்தின் மேட்டூர் பகுதி செயல்வீரர்கள் அறிமுக கூட்டம்
தேசிய உரிமை இயக்கத்தின் மேட்டூர் பகுதி
செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் அக்டேபர் 6 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம்
மேட்டூர் வட்டம் கிழக்கு ஓலைப்பட்டியில் நடந்தது. இவ்விழாவில் மேட்டூர்
வட்டத்தை சேர்ந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும் 1 லட்சம் மரக்கறுகள் நட்டு நாட்டை நம்மால் முடிந்தவரை பசுமையாக்க
வேண்டும் என்றும், சாலைகளில் நடைபெறும் விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க
வேண்டும் எனும் தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இவ்விழாவிற்க்கு
தேசிய உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் திரு. மூ. மோகன்ராஜ் அவர்கள் தலைமை
தாங்கி உரை நிகழ்த்தினார். மேலும் இயக்கத்தின் மாநில கொள்கை பரப்பு
செயலாளர் திரு. கிருபானந்த், நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு. கதிரேசன்
ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேட்டூர் நகர செயலாளர்
திரு. சிலம்பரசன் விழாவிற்க்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி முடிவில்
புதிதாய் இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்களூக்கு அடையாள அட்டை
வழங்கப்பட்டது.
1 comment:
Nice Co-ordination,
Good work
Post a Comment