புதியதலைமுறை செய்தியாளரை வழக்கில் சேர்த்ததற்குகண்டனம்
சென்னையில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை இயக்குநர் ராமானுஜத்தை சந்தித்த பத்திரிகையாளர்கள், எந்த விதமான விசாரணையும் இல்லாமல், செய்தியாளர் பெயரை காவல்துறை செய்திக்குறிப்பில் சேர்த்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து மனு ஒன்றையும் பத்திரிகையாளர்கள் அளித்தனர். அப்போது பத்திரிகையாளரிடம் பேசிய காவல்துறை இயக்குநர் ராமானுஜம், இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரை அழைத்து பேசியதாகவும், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தாகவும் கூறினார்.
இதுபோன்று செய்திக்குறிப்பு வெளியிடும்போது, கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, காவல்துறையின் இந்த செயல் பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, நெல்லையில் பத்திரிகையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

More News click here..........
No comments:
Post a Comment