Friday, October 4, 2013

ஏற்காடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு - www.tnfinds.com - Best Site in the World

ஏற்காடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ., பெருமாள் மரணமடைந்ததால் தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

2011 பொதுத்தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி ஏற்காடு சட்டபேரவை உறுப்பினர் பெருமாள் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2011 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெருமாள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வைச்சார்ந்த தமிழ்செல்வன் 66 ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருந்தார். மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜாசெல்வம் 2 ஆயிரத்து 66 வாக்குகள் பெற்றிருந்தார்.

More News Click here.......... 
 

No comments: