Thursday, October 10, 2013

எல்.பி.ஜி மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை… வீரப்ப மொய்லி - www.tnfinds.com - Best Site in the World

எல்.பி.ஜி மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை… வீரப்ப மொய்லி

டெல்லி: உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்காதவரை, சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் அட்டை காட்டாயமில்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். சமையல் எரிவாயு மானியத்தை பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக பணமாக செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி நாடு முழுவதும் 97 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 19 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்த வங்கி கணக்கு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எல்.பி.ஜி மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை… வீரப்ப மொய்லி இந்நிலையில் குடிநீர், கேஸ் இணைப்புகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியத்திட்டங்களை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், அரசின் மானிய திட்டங்களை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாய மில்லை என தீர்ப்பளித்தனர். இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த 19 மாவட்டங்களிலும் இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்படி ‘சமையல் எரிவாயு மானியம் பெற, உச்ச நீதிமன்றம் அனுமதிக்காத வரை ஆதார் அட்டை கட்டாயமில்லை' என மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி

No comments: