Thursday, October 10, 2013

தூத்துக்குடியில் சஸ்பெண்ட் செய்ததற்காக கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற பி.இ. மாணவர்கள் - www.tnfinds.com - Best Site in the World

தூத்துக்குடியில் சஸ்பெண்ட் செய்ததற்காக கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற பி.இ. மாணவர்கள்


தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியின் முதல்வர் சுரேஷ். சுரேஷ் மாணவர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் முதல்வர் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர். இதையடுத்து இன்று காலை சுரேஷை அவர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து வல்லநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சஸ்பெண்ட் செய்ததற்காக கல்லூரி முதல்வரை மாணவர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

No comments: