எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: 24 மணி நேரத்தில் 3 முறை தாக்குதல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில்,
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து கடந்த 24 மணி
நேரத்தில் 3 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராணுவ செய்தி
தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்த்னரும் பதில் தாக்குதல் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு, இதுவரை 127 முறை பாகிஸ்தான் ராணுவம், ஒப்பந்தத்தை மீறி
தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக அளவில்
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment