Saturday, October 12, 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளராக மாறன் அறிவிப்பு - www.tnfinds.com - Best Site In the World

ஏற்காடு இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளராக மாறன் அறிவிப்பு

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த மாறன், அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
இடைத்தேர்தலில், போட்டியிட விண்ணப்பித்தவர்களை கட்சியின் தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரை முருகன் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, நேர்காணல் செய்து, வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த மாறன், ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

More News Click Here........... 


No comments: