Thursday, October 10, 2013

எல்லைதாண்டி மீன்பிடித்த 26 இலங்கை மீனவர்கள் கைது - www.tnfinds.com - Best Site in the World

எல்லைதாண்டி மீன்பிடித்த 26 இலங்கை மீனவர்கள் கைது


தூத்துக்குடி: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 26 பேரை தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கைது செய்தனர். கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 80 மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் 26 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் 26 பேரையும் கைது செய்ததோடு, அவர்களின் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் தூத்துக்குடி கொண்டு வரப்படுகின்றனர். இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: