Tuesday, October 1, 2013

அரசு பங்களாவில் டேரா... அத்வானி, கிருஷ்ணா, அழகிரி உள்பட 36 பேர் காலி செய்ய மறுப்பு - www.tnfinds.com - Best site in the World

அரசு பங்களாவில் டேரா... அத்வானி, கிருஷ்ணா, அழகிரி உள்பட 36 பேர் காலி செய்ய மறுப்பு

அமைச்சர் பதவி போன பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் ஆக்கிரமித்துள்ளனர் 36 முன்னாள்கள். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி என 36 பேரும் கட்சி பேதமின்றி அனைவரும் டேராபோட்டுக்கொண்டு அமர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. பதவி போன பிறகும் அரசு கட்டிடங்களில் தங்கி இருக்கும் எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் குறித்த விபரத்தை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்குமாறு எஸ்.சி.அகர்வால் என்ற சமூக ஆர்வலர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கு நகர மேம்பாட்டு அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி பல முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 36 மாஜி மத்திய அமைச்சர்கள், தங்களின் பதவி பறிபோன பிறகும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் இன்னும் இருந்து வருகின்றனர்.

 
இந்த முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் வாஸ்னிக், அம்பிகா சோனி, அஜய் மக்கான், சி.பி.ஜோஷி, பவன்குமார் பன்சால், எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்குவர்.

 
பா.ஜ.,வைச் சேர்ந்த அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கைய்ய நாயுடு, ரவி சங்கர் பிரசாத் ஆகியோரும் உள்ளனர்.

 
திமுக.,வைச் சேர்ந்த மு.க.அழகிரி, தயாநிதி, டி.ஆர்.பாலு ஆகிய 3 முன்னாள்அமைச்சர்களும் அரசு பங்களாவில் டேரா போட்டுள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், திரிணாமுல் காங்கிரசின் சவ்காதா ராய் மற்றும் சி.எம்.ஜடுவா ஆகியோரும் உள்ளனர்.

 
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட மாளிகைகளில் இவர்கள் சட்ட விரோதமாக தங்கி வருகின்றனர். இது தொடர்பாக அவர்களுக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலாளர்கள் மூலம் மாற்று இடங்கள் அளிக்கப்பட்ட பிறகும் அரசு பங்களாக்களை காலி செய் அவர்கள் மறுத்து வருகின்றனர்

மாஜி அமைச்சர்கள் தங்கி வரும் பங்களாக்கள் தற்போது பதவியில் இருக்கும் உறுப்பினர்கள் பலருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ஆகும். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்காளக்களில் இடம் இல்லாத காரணத்தால் வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
 More News Click Here.....
 
 
 

No comments: