Saturday, October 5, 2013

பஞ்சாப் காங்கிரஸ் தலைவரின் மனைவி மீது ஆசீட் வீச்சு!கண் பார்வை பறிபோனது! - www.tnfinds.com - Best site in the World


பஞ்சாப் காங்கிரஸ் தலைவரின் மனைவி மீது ஆசீட் வீச்சு!கண் பார்வை பறிபோனது!

ஜலந்தர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ரஸ்பால் சிங் மனைவி ஜிதேந்தர் கவுர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து வரியம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஜிதேந்தர் கவுர் முகம் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். தற்போது ஜிதேந்தர் கவுர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்கு பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுக்பால் சிங் கேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


No comments: