டி.டி. மருத்துவக்கல்லூரி விவகாரத்தில்
மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், டி.டி.மருத்துவ கல்லூரி மாணவர்கள், இந்த கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், உண்ணாவிரதத்தை மாணவர்கள் வாபஸ் பெற்று விட்டார்கள் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கே.கே.சசிதரன், ‘இந்த மனுவுக்கு இந்திய மருத்துவ கல்வி கவுன்சில், மத்திய மற்றும் மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்றார்.
No comments:
Post a Comment