Saturday, October 5, 2013

ராஜபக்சே முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வராகப் பதவி ஏற்கிறார் விக்னேஸ்வரன்! - www.tnfinds.com - best site in the World


ராஜபக்சே முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வராகப் பதவி ஏற்கிறார் விக்னேஸ்வரன்!


கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் வரும் 7-ந்தேதி பதவி ஏற்கிறார். இலங்கையில் நடந்த வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சி.வி. விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு புதிய மாகாண அரசு பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சி. வி. விக்னேஸ்வரன் முதல்வராகப் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழா கொழும்பில் அதிபர் மாளிகையில் ராஜபக்சே முன்னிலையில் நடக்கிறது. அதன் பிறகு 11-ந்தேதி வடக்கு மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் முதல்வர் விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். முன்னதாக அவர் அதிபர் ராஜபக்சேயுடன் பதவி ஏற்பு விழா குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பதவி ஏற்பு தேதி முடிவு செய்யப்பட்டதாகவும் வடக்கு மாகாண அமைச்சர்கள் பட்டியல் இன்னும் முடிவாகவில்லை என்றும் சம்பந்தன் கூறினார். ராஜபக்சே முன்னிலையில் பதவி ஏற்கும் முடிவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது புதுப்பாதையொன்றை காட்டுவதாக அமைந்துள்ளது எனவும், எதிர்காலத்தில் சாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கான அடையாளமாக இதை கொள்ளலாம் என்றும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

No comments: