Friday, January 10, 2014

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்தது!!.. - www.tnfinds.com - Best site in the world.....


டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்தது!!..

சென்னை: இன்றைய வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து வலிமை அடைந்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு 61.90 ரூபாயாக உயர்ந்து. காலை வர்த்தகத்தில் ஏற்றுமதியாளகளின் டாலர் பரிமாற்றத்தின் மூலம் இத்தகைய உயர்வை அடைந்ததாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

பண வர்த்தக சந்தையின் வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62 ரூபாய் என துவங்கியது, சுமார் 10.45 மணியளவில் நேற்றைய விலையான 62.07ரூபாயில் இருந்து 17 காசுகல் உயர்ந்து 61.87 ரூபாயாக இருந்தது, பின்பு சில மணி நேரங்களில் 61.90ஆகவும் சரிந்தது. அமெரிக்க டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டது இதன் காரணமாக உலகளவிய வர்த்தகத்தில் டாலரின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. மேலும் இவ்வறிக்கையின் படி அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கிறது.

 டாலர் மதிப்பு உயர்வாலும், ஏற்றுமதி அதிகரிப்பாலும், மும்பை பங்கு சந்தையில் 30 நிறுவனங்களின் நிலையை கணக்கிடும் போது சுமார் 112.39 புள்ளிகள் உயர்ந்து 20825.76 புள்ளிகளை எட்டியது.



No comments: