Wednesday, January 8, 2014

'டவுட்' தனபாலு - www.tnfinds.com - Best site in the world...

'டவுட்' தனபாலு

மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர், பனபகா லட்சுமி: ஒரு குடும்பத்துக்கு மானிய விலையில், ஆறு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு, பின், ஒன்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை மேலும் உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
டவுட் தனபாலு: 'ஆண்டுக்கு, ஆறாக இருந்த சிலிண்டர் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்தினோம்'னு பெருமை பீத்துறீங்க... ஆனா, 'வருஷத்துக்கு, 12 சிலிண்டர்களாக இருந்ததை, ஆறாக குறைத்ததும் நாங்க தான்' என்பதை மட்டும் ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'

முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி: தி.மு.க.,வில் தென் மண்டல செயலராக இருக்கிறேன். ஆனால், கட்சியில் எனக்குத் தெரியாமல், பல காரியங்கள் நடக்கின்றன. அப்படித்தான், மத்திய அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., விலகியபோதும் நடந்தது.
டவுட் தனபாலு: 'இலங்கை தமிழர் விவகாரத்தை காரணம் காட்டி, எங்களை எல்லாம் பதவி விலகச் சொன்னீங்க... காங்கிரஸ் மீதுள்ள கோபத்தால் எடுத்த முடிவுன்னு நினைச்சு, நானும் ராஜினாமா செஞ்சேன்... ஆனா, அதே காங்கிரசிடம் நீங்க கெஞ்சிக் கூத்தாடி, கனிமொழியை ராஜ்யசபா எம்.பி.,யாக்கிய போது, நெஞ்சம் உடைந்து போனேன்' என்பதை நேரடியா சொல்லாமல், சுத்தி வளைக்குறீங்களோன்னு, 'டவுட்' வருதே...!

தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர், சுதீஷ்: துரோகிகள் வெளியேறி விட்டதால், தே.மு.தி.க., மகிழ்ச்சியாக இருக்கிறது.
டவுட் தனபாலு: அடுத்தடுத்து, அ.தி.மு.க., பக்கம் சாயும் எம்.எல்.ஏ.,க்களைத் தான் சொல்றீங்க... அதுசரி, வெளியேறியது துரோகிகள்னு முடிவெடுத்த பின்னாடி, கட்சியில் இருந்து அவர்களை இன்னும் ஏன் நீங்கள் நீக்காமல் இருக்கீங்கங்கறது தான், மக்களின், 'டவுட்'டா இருக்கு...!

No comments: