Wednesday, January 8, 2014

டீ கடை பெஞ்சு - www.tnfinds.com - Best site in the world...

டீ கடை பெஞ்சு

'கம்யூனிஸ்டுகளால் பலன் இல்லே!'

''அதிரடியா வசூல் நடத்துறாங்க பா...'' எனப் பேசியபடி, நாயர் கடைக்கு வந்த அன்வர்பாயிடம், ''இப்பல்லாம், வசூல் பத்தியே அதிகமா பேசுறோம்... இப்போதைய வசூல் யாருதுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''அது இல்லை பா... பொங்கல் வருதில்லையா... இதுக்காக, சுகாதாரத் துறை, மருத்துவ நல பணிகள் பிரிவுல உயர் அதிகாரிக்கு, தங்க மோதிரம், செயின் வாங்கித் தரணும்னு சொல்லி, திருவள்ளூர் மாவட்டத்துல இருக்குற, சுகாதார அதிகாரி ஒருத்தர், 'கொறஞ்சது, 1,000 ரூபாயாவது தரணும்'னு, அரசு டாக்டர்கள்ட்ட, அதிரடியா வசூல் நடத்துறார் பா...

''ஏன் தரணும்னு கேள்வி கேட்டா, 'டைவர்சன் டூட்டின்னு, போஸ்டிங் போட்டிருக்கிறதை எல்லாம், காலி பண்ணி, வேற இடத்துக்கு விரட்டிருவேன்... மெமோ தருவேன்'னு மிரட்டுறாரு... உயர் அதிகாரிங்க கேக்குறாங்களோ இல்லியோ... இடையில இருக்குற அதிகாரிங்க, அவங்க பேரைச் சொல்லியே வசூல் செஞ்சுடறாங்க பா... இதை வெளியில சொல்லவும் முடியல... மெல்லவும் முடியலே...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.

''சிலப்பதிகாரத்தை எழுதியவரு யாருங்க...'' என, திடீரென ஒரு, 'ஜெனரல் நாலெட்ஜ்' கேள்வியை எழுப்பினார் அந்தோணிசாமி.

''இளங்கோ...'' என, பதில் அளித்தார் அன்வர்பாய்.

''இடைத்தேர்தல் வர்றதால, மக்களை திருப்திபடுத்தற வேலைகள், மும்முரமா நடக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''சென்னை, ஆலந்தூர்ல, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வா இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜினாமா செய்ததால, அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கப் போகுது... அதைத் தானே சொல்றீங்க...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமாங்க... லோக்சபா தேர்தலோடு சேர்த்து, இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கப் போகுதுங்க... இந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்ல, குண்டும் குழியுமா இருந்த சாலைகளுக்கெல்லாம், 'பளிச்'சின்னு, தார் ரோடு போடறாங்க...

''ஆளுங்கட்சியைச் சேர்ந்த, கொளப்பாக்கம் கிராம தலைவர், ஊர் முழுக்க, ஒவ்வொரு வீட்டுக்கும், பெரிய சைஸ்ல, முதல்வர் படத்தை போட்டு, புத்தாண்டு காலண்டரை கொடுத்திருக்காரு... ஐம்பதாயிரத்திற்கும் அதிகமா, காலண்டர் போயிருக்குங்க...'' எனக் கூறிச் சிரித்தார் அந்தோணிசாமி.
''அ.தி.மு.க., கூட்டணியில, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்க்கிறதுனால, எந்த லாபமும் இல்லைன்னு, உளவுத்துறை அறிக்கையை சமர்ப்பிச்சிட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்லும் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''கம்யூனிஸ்ட் கட்சிகளை, கூட்டணியில வைச்சுக்கிறதுனால, மதசார்பற்ற அணி என்ற இமேஜ் கிடைக்கும்....ஆனா, லோக்சபா தேர்தலுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, ஓட்டுப்போட பொதுமக்கள் விரும்ப மாட்டாங்க... அதேசமயம், பா.ஜ., மோடி அலை வீசுவதால, அக்கட்சிக்கு, 10 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கும்...

''அ.தி.மு.க., கூட்டணியில, பா.ஜ., சேர்ந்துட்டா, 40 தொகுதிகளிலும், அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற வாய்ப்பு இருக்குன்னு, உளவுத் துறை ரிப்போர்ட் குடுத்திருக்கா ஓய்...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.

சிந்தனை விரிய, நண்பர்கள் அனைவரும் அமைதியாய் டீ குடித்தனர். பின் அவர்கள் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது!

More Hot News Click Here....

No comments: