Friday, January 10, 2014

வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள், விலை தானாக குறையும்: மனுதாரரிடம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் - www.tnfinds.com - Best site in the world....


வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள், விலை தானாக குறையும்: மனுதாரரிடம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்

டெல்லி: வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தவரிடம் வெங்காயம் சாப்பிடாதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வெங்காயம் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தது. வெங்காயத்தை உரித்தால் மட்டும் அல்ல சில நேரங்களில் அதன் விலையைக் கேட்டாலே மக்களுக்கு கண்ணீர் வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 வரை அதிகரித்தது.

 இந்நிலையில் வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


இந்த மனு நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் காய்கறி விலையை கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிட மறுத்துவிட்டது. மேலும் வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். அதன் பிறகு விலை தானாக குறையும் என்று நீதிமன்றம் மனுதாரரிடம் தெரிவித்துள்ளது. 

இது போன்ற பொது நல வழக்குகளை தொடர்ந்து தங்களின் சுமையை அதிகரிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் மனுதாரரிடம் தெரிவித்துள்ளது.






No comments: