Thursday, January 9, 2014

பக்க வாத்தியம் - www.tnfinds.com - Best site in the world...

பக்க வாத்தியம்

போற போக்குல விட்டு பிடிக்கணும்;ஆளுங்கட்சி சேர்மன் 'சாமர்த்தியம்!'

விழுப்புரம் நகராட்சி மன்ற கூட்டம், ஆளுங்கட்சி சேர்மன் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியவுடன், அதிகாரிகள் சிலர், தங்களை மதிப்பதில்லை, வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல் தெரிவிப்பதில்லை எனக் கூறி, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பிரச்னை எழுப்பினர்.வெளிநடப்பு செய்வதாகக் கூறி, அனைத்து கவுன்சிலர்களும், சேர்மன் அறைக்குச் சென்றனர். தன் அறைக்குச் சென்ற சேர்மன், ஆவேசமடைந்த கவுன்சிலர்களை சமாதானப்படுத்திய பின், மன்ற கூட்டம் அமைதியாக நடந்தது.கூட்டம் முடிந்தவுடன், கவுன்சிலர் ஒருவர் சேர்மனிடம், 'ஏன் தலைவரே... நாங்க வெளிநடப்பு செய்த போது, எங்களைத் தடுக்கல?' என, அப்பாவியாய் கேட்டார்.'உங்க போக்குலயே போயி, திரும்ப வர வச்சேன்' என்றார்.இதைக் கேட்ட சக கவுன்சிலர்கள், 'அச்சச்சோ... இவரோட தூக்கத்தைக் கெடுக்கணும்ன்னு நினைச்சு, நாமே, 'பல்பு' வாங்கிட்டமே...' என, வெட்கியபடி நகர்ந்தனர்!

யானையிடம் தப்பிக்க புது 'ஐடியா' கொடுத்த வனத்துறை அதிகாரி!


கோவை மாவட்டம், வால்பாறையில், மனித வனவிலங்கு மோதலைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம், கடந்த, 4ம் தேதி நடந்தது.கூட்டத்தில் பேசிய, வால்பாறை எம்.எல்.ஏ., ஆறுமுகம், 'யானைகள் எஸ்டேட் பகுதிக்குள் வராமல் தடுக்க, அதற்கு தேவையான உணவு வசதிகளை, வனத்துறையினர் செய்ய வேண்டும்; எஸ்டேட் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என்றார்.மாவட்ட வன அலுவலர் வேலுச்சாமி பேசுகையில், 'முழுமுதற்கடவுளான விநாயகரை (யானை) மனம் உருகி வேண்டினால், எந்த ஒரு தீமையும் நடக்காது. யானைக்கு ஞாபகசக்தி அதிகம். எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் வரும் யானைகளை, பொதுமக்கள் துன்புறுத்தக் கூடாது. அவற்றிடம் நண்பனாக பழகினால், மனிதர்களுக்கு எந்த ஒரு துன்பமும் ஏற்படாது. வனவிலங்கு - மனித மோதலை தடுக்க, எஸ்டேட் நிர்வாகங்கள், வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார்.பின்னால் இருந்த ஒருவர், 'நண்பனா பழகணும்னு நைசா சொல்லிட்டு இவரு போயிடுவாரு... ராத்திரியானா நாங்கபடுற பாடு, இவருக்கு எப்படி தெரியும்' என புலம்பினார்.

More Hot News Click Here...

No comments: