Thursday, January 9, 2014

அறிவியல் ஆயிரம் - www.tnfinds.com - Best site in the world...

அறிவியல் ஆயிரம்

மணலை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகள்

வண்ணத்துப்பூச்சிகள், பூக்களில் இருந்து தான் தேனை உறிஞ்சும்.இது தவிர மணலில் இருந்து, தாது உப்புகளை உறிஞ்சும் இயல்பைப் பெற்றுள்ளன. திருச்சூருக்கு அருகில் சிம்மோனி அணையில், சிம்மோனி சரணாலயம் உள்ளது. இங்கு வரும் வண்ணத்துப்பூச்சிகள், அணையின் சேற்று மணலில் உள்ள தாது உப்புகளையும் உறிஞ்சிக் குடிக்கின்றன. குளிர் காலத்தில் இனப்பெருக்கத்திற்காக வரும் வண்ணத்துப் பூச்சிகளால், சரணாலயம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு இருப்பது போல் காட்சியளிக்கிறது. இந்த சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சிகள் ஏப்ரல் வரை இருக்கும்.

தகவல் சுரங்கம்

முதல் உலகப்போரின் நூற்றாண்டு


முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடந்தது. முதல் உலகப்போரில் பிரிட்டன் பங்கு பெற்றது. இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசு நல்லாட்சியை தரும் என நம்பிய இந்திய தலைவர்கள், முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக இருந்தனர்.முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவப் படையில் சேருமாறு காந்தியடிகள், இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். முதல் உலகப்போரில் பிரிட்டன் போரில் ஈடுபட்டு பலவீனமாக இருந்ததால், இந்திய தலைவர்கள் மென்மையான போக்கை கடைபிடித்தனர். 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய தலைவர்களின் விசுவாசத்தை தகர்த்து எறிந்தது.

More Hot News Click Here...

No comments: