Thursday, January 9, 2014

அமெரிக்காவை நடுங்க வைக்கும் 'போலார் வோர்டெக்ஸ்' என்றால் என்ன என்று தெரியுமா...? - www.tnfinds.com - Best site in the world...


அமெரிக்காவை நடுங்க வைக்கும் 'போலார் வோர்டெக்ஸ்' என்றால் என்ன என்று தெரியுமா...?

பாரீஸ்: அமெரிக்காவை நடுநடுங்க வைத்து வரும் கடுமையான குளிருக்குக் காரணம் போலார் வோர்டெக்ஸ் எனப்படும் துருவப் பனிப் புயல்தான் காரணம். விக்கிபீடியாவைப் போய்ப் பார்த்தால் அதுகுறித்து நிறையக் கொட்டிக் கிடக்கிறது. 

ஆனால் இந்த துருவப் பனிப் புயலுக்கு புவிவெப்பமயமாதலும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். இதையேதான் தற்போது அமெரிக்க அரசும் கூறியுள்ளது. பூமியின் அதிகரித்த வெப்ப நிலை காரணமாகத்தான் துருவப் பகுதிகளில் கடும் வெடிப்புகளும், புயல்களும் உருவாகி அமெரிக்காவை வாட்டு வாட்டு என்று வாட்டி வருவதாக கூறுகிறார்கள்.

பயங்கரமான பனிப் புயல்.


துருவப் பனிப் புயலானது, வலுவானது, கடுமையான குளிர் காற்றை சுற்றிப் பரப்பக் கூடியது. மிகக் கடுமையான குளிருக்கு இது வழி வகுக்கும். இதனால்தான் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளும், கனடாவும் இப்போது உறைந்து போய்க் கிடக்கின்றன. தொடர்ந்து இந்த பனிக் காற்று கடுமையாக வீசி வருவதால்தான அமெரிக்கா மீள முடியாமல் தவிக்கிறது.


மற்ற பனிப் புயல்களை விட இது வலுவானது.


பிற பகுதிகளில் வீசும் பனிப் புயல்களை விட இந்த துருவப் பகுதிகளிலிருந்து வீசும் பனிப் புயலும், காற்றும் மிகவும் வலுவானவை. கடுமையான குளிரை ஏற்படுத்தக் கூடியவை. இந்த துருவப் பனிப் புயலால், வெப்ப நிலை அடியோடு சரிந்து போய் விடும். இதனால்தான் தண்ணீரையே பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்கா அடியோடு உறைந்து போய்க் காணப்படுகிறது.

கோடையில் வீக் ஆகி.. குளிர்காலத்தில் பிக்கப் ஆகும்.


இந்த துருவப் பனிப் புயலானது கோடை காலத்தில் குறைவாக இருக்கும். அதேசமயம், குளிர்காலத்தில் மிகக் கடுமையாக, வலிமையாக இருக்கும்.

1000 கிலோமீட்டர் சுற்றளவுக்கு.


துருவப் பகுதிகளை ஒட்டியுள்ள கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்தப் பனிப் புயலின் தாக்கம் இருக்கும்.

அமெரிக்காவை அலைக்கழிக்கும் ஆர்க்டிக் புயல்.


தற்போது அமெரிக்காவை பாடாய்ப்படுத்தி வரும் துருவப் பனிப் புயலானது ஆர்க்டிக் துருவப் பிரதேசத்திலிருந்து வீசி வருகிறது. இது இரண்டு மையங்களைக் கொண்டுள்ளது. ஒன்று பஃபின் தீவு அருகே உள்ளது. இன்னொன்று ரஷ்யாவின் வட கிழக்கு சைபீரியா அருகே உள்ளது.

உருகி வரும் ஆர்க்டிக்.


ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் சமீப காலமாக வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பனிப் புயல்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளன. அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. இதனால் பனிக்கட்டிகள் உருகுவதும் அதிகரித்துள்ளது.

வழக்கமாக ஐரோப்பாவில் முடியும்.. ஆனால்.




வழக்கமாக குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில்தான் கடுமையான குளிர் நிலவும். ஆனால் இந்த முறை அமெரிக்காவும் இதில் மாட்டிக் கொண்டு விட்டது.

வேகமாக அதிகரித்து வரும் வெப்பநிலை.


ஆர்க்டிக் பகுதியில் தொடர்ந்து வெப்ப நிலை சீராக அதிகரித்து வருவதால்தான் இந்த திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

More Hot News Click Here...


























No comments: