Wednesday, January 8, 2014

விஜயகாந்த் மச்சான் சுதீஷுக்குக் கிடைக்குமா 'டபுள் கொட்டு' ...?? - www.tnfinds.com - Best site in the world...


விஜயகாந்த் மச்சான் சுதீஷுக்குக் கிடைக்குமா 'டபுள் கொட்டு' ...??

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மைத்துனர் சுதீஷுக்கு 2 தொகுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்க வேண்டும் என்று கோரியிருப்பதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

 இந்தக் கோரிக்கையை தன்னுடன் தற்போதைக்கு தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பாஜகவிடம் வைத்துள்ளதாகவும் பேசிக் கொள்கிறார்கள், அரசியல் அறிந்தவர்கள். 

ஆனால் இந்த டபுள் கொட்டுக்கு பாஜக உடன்படுமா என்பது தெரியவில்லை. ஏன் விஜயகாந்த், சுதீஷுக்கு இரண்டு தொகுதிகளைக் கேட்கிறார் என்றும் புரியவில்லை.

லோக்சபா திருவிழா.


லோக்சபா தேர்தல் திருவிழா விரைவில் வரப் போகிறது. இதைக் கோலாகலமாக கொண்டாட நாடு முழுவதும் உலாத்தி வரும் ஏகப்பட்ட அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி வருகின்றன.

முதலில் கூட்டு.


தேர்தலைச் சந்திப்பதற்கு தைரியமாக தனியாகப் போகும் கட்சிகள் இங்கு மிக மிகக் குறைவு. தனியாகப் போனால் வாக்காளர்களை சந்திப்பதில் என்ன சங்கடமோ தெரியவில்லை. இதனால் அத்தனை பேருமே பலரைச் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைக்க அலைபாய்ந்தபடி உள்ளனர்.

தமிழகத்தில் நிலவரம் சற்றே கலவரம்.


தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவைத் தவிர அத்தனைக் கட்சிகளுமே கூட்டணிக்காக குண்டாங்குறையாக போராடி வருகின்றன. யாருடன் சேரலாம், யாரைச் சேர்க்கலாம், யார் அவசியம் என்ற அலசல் ஆராய்ச்சிகள் கச்சைக் கட்டியுள்ளன.

திருவிழாக் கூட்டத்தில் தேமுதிக.


தற்போது திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளின் குறியும் தேமுதிகவாக உள்ளது. இரு கட்சிகளுமே தேமுதிகவை தங்களுடன் கூட்டு சேர்க்க பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகின்றன.

நிதானமாக பேரம்.


இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தேமுதிக தனது பேரத்தை படு நிதானமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதாவது தொகுதிகள் இத்தனை வேண்டும், இன்னின்ன தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கண்டிஷன் போட்டு வருகிறார்கள் என்று தெரிகிறது.

பாஜகவுடன் மும்முரப் பேச்சு.


திமுகவுடன் தேமுதிக அணி சேருமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாஜகவுடன் படு தீவிரமான முறையில் ரகசியமாக பேச்சுக்கள் சூடாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மச்சானுக்கு 2 தொகுதிகள்.


இந்தப் பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகளை தேமுதிக தரப்பு வைத்துள்ளதாம். அதில் ஒன்று விஜயகாந்த்தின் மைத்துனர், சுதீஷுக்கு இரண்டு தொகுதிகளைக் கேட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தென் சென்னையும் கோவையும்.


அதாவது தென் சென்னை மற்றும் கோவை ஆகிய இரு பெரும் தொகுதிகளை சுதீஷுக்குத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

பாஜக தருமா, தராதா?.


ஆனால் சுதீஷுக்கு இரண்டு தொகுதிகளைத் தர பாஜக முன்வராது என்றே சொல்கிறார்கள். இருந்தாலும் இதுகுறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை.

More Hot News Click Here...

























































No comments: