Wednesday, January 8, 2014

பூங்காவை காப்பாற்றும் கடவுள் படங்கள் - www.tnfinds.com - Best site in the world....

பூங்காவை காப்பாற்றும் கடவுள் படங்கள்

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள, கலைஞர் கருணாநிதி பூங்கா சுற்றுச்சூழலை இந்து மதக் கடவுள் படங்கள் காப்பாற்றி வருகின்றன.

பட்டாளம் மார்க்கெட் அருகே பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ளது, கலைஞர் கருணாநிதி பூங்கா. பூங்காவை சுற்றி, பலர் சிறுநீர் கழித்து சுற்றுச்சூழலை கெடுத்து வந்தனர்.
தவிர, பூங்கா எதிரேயுள்ள 'டாஸ்மாக்கில்' மது அருந்தும் பலர், பூங்கா சுற்றுச்சுவரை கழிப்பிடமாகவே மாற்றி விட்டனர்.புகார்களையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள், வெறும் 'பிளீச்சிங் பவுடரை' மட்டும் தெளித்து சென்றனர்.அதனால் பகுதி வியாபாரிகள் கடவுளை நாட முடிவெடுத்து, பூங்காவை சுற்றிலும், ஒன்றிரண்டு மசூதி படங்களும், அதிகளவில் இந்து மதக் கடவுளின் படங்களையும் அடங்கிய பழைய காலண்டர் அட்டைகளையும் கட்டிவிட்டுள்ளனர்.தவிர, 'சிறுநீர் கழிக்காதீர்' என, வேண்டுகோள் விடுத்தும், அறிவிப்பு பலகைகளை எழுதி வைத்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி செய்ய முடியாததை, கடவுள் படங்கள் செய்வதாக, பகுதி வியாபாரிகள் கூறுகின்றனர்.

More Hot News Click Here...

No comments: