Thursday, January 9, 2014

'தலைவர்' படித்த பள்ளியை சீரமைக்காவிட்டால் போராடுவோம்: ரஜினி ரசிகர்கள் - www.tnfinds.com - Best site in the world....

'தலைவர்' படித்த பள்ளியை சீரமைக்காவிட்டால் போராடுவோம்: ரஜினி ரசிகர்கள்

பெங்களூர்: பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படித்த ஆரம்ப பள்ளியை அரசு சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தெற்கு பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு கன்னடா துவக்கப் பள்ளியில் படித்தார். இந்த பள்ளியின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு தற்காலிக இடங்களில் வைத்து பாடம் நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில் 500 மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கிறதே தவிர முடிந்தபாடில்லை. இந்நிலையில் வரும் 21ம் தேதிக்குள் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றால் மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில ரஜினி ஜி சேவா சமிதி துணை தலைவர் பிரகாஷ் கௌடா கூறுகையில்,
ரஜினி படித்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டோம். ஆனால் இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் ஏற்கனவே கல்வி அமைச்சர் மற்றும் ஆளுநருக்கு கடிதம் எழுதினோம். பள்ளியின் நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமடைந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு வரும் 21ம் தேதிக்குள் உரிய தீர்வு காணவில்லை என்றால் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்.
இது மட்டும் தனியார் பள்ளியாக இருந்தால் சீரமைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். ஆனால் இது அரசு பள்ளி என்பதால் நாங்கள் உதவ முன்வந்தாலும் அதற்கு பல விதிகள் உள்ளன. இந்த பள்ளியை விரைவில் சீரமைக்குமாறு முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்றார்

More Hot News Click Here...

No comments: