Thursday, January 9, 2014

'டவுட்' தனபாலு - www.tnfinds.com - Best site in the world...

'டவுட்' தனபாலு

பா.ஜ.,வில் உள்ள காமெடி நடிகர், எஸ்.வி.சேகர்: மன்மோகன் சிங்கால் ஏற்பட்ட பேரழிவைத் தாண்டி, யாராலும் இனி, நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்த முடியாது.
டவுட் தனபாலு: கட்சியில் சேர்ந்த சூட்டோடு சூடாக, வேட்பாளர் பட்டியலிலும் இடம்பிடிச்சிடணும்னு முடிவு பண்ணிட்டீங்களோன்னு, 'டவுட்' வருது... 'இதுக்கு மேல யாராலும் நாட்டைக் கெடுக்க முடியாது'னு நீங்க சொல்றது இருக்கட்டும்... 'இதுக்கு மேலே, உங்களைப் போல, யாராலும் கட்சி தாவ முடியாது'ன்னு மக்கள் கிண்டலடிக்கிறது, உங்க காதுல விழலியோங்கறது தான், என்னோட, 'டவுட்!'

காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங்: வீட்டில் அமர்ந்து, அரசியல் கட்சியையும், அரசியல் தலைவர்களையும் வசைபாடும் சமூக ஆர்வலர்கள், 'ஆம் ஆத்மி' கட்சியினரிடம் இருந்தும், அதன் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்தும், பாடங்களை கற்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'வீட்டுல, 'ஏசி'ல உக்கார்ந்துட்டு, காங்கிரசை விமர்சிக்காதீங்க... ரோட்டுல வந்து, கேள்வி கேளுங்க'னு அரவிந்த் கெஜ்ரிவாலை உசுப்பேத்தி, ரணகளப்பட்டீங்க... இது பத்தாதுன்னு, இன்னும் பலரையும் கோதாவுக்குள் இறக்கிப் பார்க்க நினைப்பது சரியாங்கறது தான், என்னோட, 'டவுட்!'

தமிழக மின்துறை அமைச்சர், நத்தம் விசுவநாதன்: தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்க, பா.ஜ., - காங்., என, அனைத்து கட்சிகளும் தயங்குகின்றன. தி.மு.க., ஒரு மூழ்கும் கப்பல். அதில் பயணம் செய்வோர், ஆபத்தில் சிக்கிக் கொள்வர்.
டவுட் தனபாலு: 'எங்களை மாதிரி தனியா நிற்க முடியுமா'னு, தி.மு.க.,வின் நிலையை பரிகாசம் பண்றீங்களா... இல்லை, பா.ஜ., - காங்., உள்ளிட்ட கட்சிகளை காப்பாத்த நினைக்குறீங்களா என்ற, 'டவுட்' வருதே...!

More Hot News Click Here...

No comments: