Thursday, January 9, 2014

தங்க நகை மதிப்பில் 75% கடன் தர ரிசர்வ் வங்கி அனுமதி - www.tnfinds.com - Best site in the world....


தங்க நகை மதிப்பில் 75% கடன் தர ரிசர்வ் வங்கி அனுமதி

டெல்லி: வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் தங்க நகைகள் மீது அளிக்கும் கடனின் அளவுக்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. அதன்படி, தங்க நகையின் மதிப்பில் இனி 75 சதவீதம் வரை கடனாக அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 இதுவரை நகையின் மதிப்பில் 60 சதவீதம் வரை மட்டுமே கடன் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இப்போது அதை தளர்த்தியுள்ளதன் மூலம், தங்க நகை மீது கடன் பெறுவோருக்கு கூடுதலாக 15 சதவீத தொகை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்களில் தங்க நகை அடமானம் தருவதற்கு பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. கடன் தரும்போது, அடமானம் பெற்ற நகையின் தரம் (கேரட்), எடை ஆகியவைப் பற்றிய விவரத்தை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களது நிறுவன ஆவணத்தில் குறிப்பிட்டு வாடிக்கையாளருக்கு தரவேண்டும்:


5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளரிடம் இருந்து பான் கார்டு நகலை கேட்டு பெறவேண்டும், 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைக் கடனாகப் பெற்றால் ரொக்கமாகத் தராமல் காசோலையாக வழங்கவேண்டும். 

கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது எல்லாக் கிளை களிலும் ஒரே மாதிரி ஆவணங்கள் முறையைத்தான் பின்பற்றவேண்டும்: மேலும், அனைத்து வாடிக்கையாளர்களிடமும் கே.ஒய்.சி பெற வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்தது. 

ஆர்.பி.ஐ. அதேபோல நகையின் மதிப்பில் 60 சதவீதம் வரை மட்டுமே கடன் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

More Hot News Click Here...








No comments: