Thursday, January 9, 2014

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது கேலிக்கூத்து- ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கருத்து - tnfinds.com - Best site in the world...


ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது கேலிக்கூத்து- ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கருத்து

இதை ஈடுகட்டும் வகையில் எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தாலும், மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுக்கிறபோது அதற்கு கட்டணம் நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்திய வங்கிகள் சங்கம் கோரி உள்ளது. 

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி.சக்கரவர்த்தி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பணம் எடுப்பதற்கு, அதுவும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது மிகவும் கேலிக்கூத்தானது. 

இது ஒரு போதும் எங்கும் நடக்காது என்றார். மேலும் பணம் எடுப்பதால் அதிக செலவாகிறது என வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூல் செய்தால், நீங்கள் வங்கிக்கு போனால் கூட உங்களிடம் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.



No comments: