Friday, January 10, 2014

அறிவியல் ஆயிரம் - www.tnfinds.com - Best site in the world...

அறிவியல் ஆயிரம்

ஆயுர்வேதத்தில் வெல்லம்
சீனியோடு ஒப்பிடுகையில், வெல்லம் சிறந்தது. வெல்லத்திற்கு தமிழில் பழைய பெயர் "அக்காரம்'. அதனால் தான் வெல்லம் சேர்த்து செய்யப்படும் பொங்கலுக்கு, அக்கார அடிசில் என்று பெயர். கரும்பை செக்கில் வைத்து, அரைத்து செய்யப் படுவதால் "செக்கரை' என பெயர் வந்து, அது தான் பின் சக்கரை என மாறியது. வெல்லம் ஆயுர்வேதத்தில் முக்கிய பொருள். இது பித்தத்தை தணிக்கும். அதனால் தான் நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவர். வெல்லத்தின் இனிப்பு, உணவு செரிக்கும் தன்மையைப் பெற்று உள்ளது.

தகவல் சுரங்கம்
சங்க இலக்கியத்தில் இல்லாத மஞ்சள்

பொங்கலின் போது முக்கியமாக கூறப்படும் மஞ்சள் குறித்த குறிப்புகள், சங்க இலக்கியங்களில் இல்லை. பக்தி இலக்கியத்தில் தான் மஞ்சள் வருகிறது. கண்ணனுக்கு, அவனது வளர்ப்புத் தாய் மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டுவதாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வருகிறது. மாநில அளவில், மகாராஷ்டிரா தான் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. மஞ்சள் கிழங்கில் இருந்து செய்யப்படும் குங்குமம் குறித்த குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் இல்லை. தாலியும், மஞ்சளும், குங்குமமும் பின்னர் தான் வந்தது.

More Hot News Click Here...

No comments: