Tuesday, January 7, 2014

சுவிசின் ஆல்ப்சில் கடும் பனிச்சரிவு: 4 பேர் பலி - www.tnfinds.com - Best site in the world...

சுவிசின் ஆல்ப்சில் கடும் பனிச்சரிவு: 4 பேர் பலி

சுவிசின் வாலெய்ஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுவிஸ் மலைப்பகுதியின் சில இடங்களில் பனிப்பொழிவு மிக மோசமாக உள்ளது. வாலெய்ஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு பேர் சிக்கி கொண்டனர்.
உடனே இவர்களை காப்பாற்ற ஐந்து ஹெலிகாப்டர் விமானங்கள், 26 பேர் கொண்ட உதவிக்குழு மற்றும் ஆறு மருந்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நால்வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், இதில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வாலெய்ஸ் மண்டல பொலிசார் கூறுகையில், கடந்த ஜனவரி 5ம் திகதி சரியாக மதியம் 2.40 மணியளவில் 2400 மீற்றர் உயரத்தில் இந்த பனிச்சறுக்கு நேர்ந்துள்ளது என்றும் இதில் மலையேரும் வழிகாட்டி ஒருவர், இரண்டு மலையேறும் பனிச்சருக்காளர்கள் இறந்துள்ளனர், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கடந்த ஜனவரி 4ம் திகதியும் 34 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் வாயூத் மண்டலத்தின் நென்டாஸ் பனிச்சருக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் மரணமடைந்தாக பொலிசார் கூறியுள்ளனர்.
வாலெய்ஸ் மண்டலத்தில் தொடர்ந்து பனிச்சரிவுகள் நேர்ந்ததால் இப்பகுதி முழுவதும் அபாயம் நிறைந்த சூழலில் உள்ளது என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

More Hot News Click Here...


No comments: