Friday, January 10, 2014

கிளிசரினை சருமத்திற்கு பயன்படுத்துவது எப்படி? - www.tnfinds.com - Best site in the world....


கிளிசரினை சருமத்திற்கு பயன்படுத்துவது எப்படி?

பொய்யான அழுகையை வரவழைக்கும் கிளிசரின் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் வரும் நடிகை மற்றும் நடிகர்களுக்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. கிளிசரின் பல நன்மைகளை தரக்கூடிய திரவமாகவும் உள்ளது. நமது சருமத்தை அழகுப்படுத்தும் குணங்களும் கூட கிளிசரினுக்கு உண்டு. அழகுப்படுத்துவதிலும் சருமப் பராமரிப்பிற்கும் இப்பொருள் பெருமளவு உதவுகிறது.
கிளிசரின் கண்ணீர் சுரப்பியை தூண்டி பொய்யான அழுகையை வரவழைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது தோல் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுகின்றது. கிளிசரினை நேரடியாக சருமத்தில் தடவலாம் அல்லது வேறு ஏதேனும் பொருளுடன் சேர்க்கையாகவும் தடவரலாம். இந்த கலவையை ஃபேஸ் பேக் மற்றும் மாஸ்க்காக அணிந்து கொள்ளவும் முடியும்.

கிளிசரினின் சருமப் பராமரிப்பு முறைகளை பற்றி கீழ் வரும் பகுதியில் நாம் பார்ப்போம்:

 ஈரப்பதமூட்டுதல்: 


கிளிசரின் சிறந்த ஈரப்பதமூட்டும் திரவமாக உள்ளது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை குறைக்க வல்லது. ஆகையால் இப்பொருள் குளிர் காலத்தில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவத்தை நேரடியாக சருமத்தில் தடவ முடியும். ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து அதில் கிளிசரினை நனைத்து சருமத்தில் தடவ வேண்டும். அதை போட்ட சில நொடிகளிலேயே சருமம் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் காணப்படும். மருத்துவ குணமுள்ள கிளிசரின் சொரசொரப்பான, வறண்ட மற்றும் எரிச்சல் தரும் சருமத்தை குணமாக்க முடியும். இதனால் சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும். கிளிசரினின் பயன்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. 

சுத்தம் செய்யும் திரவம்:


 தோலில் உள்ள அழுக்கு மற்றும் தூசி ஆகியவற்றை சுத்தம் செய்ய கிளிசரினை பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் இரண்டையும் கலந்து சுத்தப்படுத்தும் திரவமாக பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்பு இந்த கலவையை கொண்டு முகத்தை துடைத்த பின் தூங்கச் செல்லுங்கள். இதை தினந்தோறும் செய்யும் போது சிறந்த வகையில் உங்கள் தோலின் ஓட்டைகளில் இருக்கும் அழுக்குகளை அவை சுத்தப்படுத்தி மென்மையான சருமத்தை தருகின்றன. கிளிசரினின் பல பயன்களில் சுத்தம் செய்வதும் ஒரு சிறந்த குணமாக உள்ளது.

 சருமத்திற்கு ஊட்டம்: 


சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கும் திரவமாக கிளிசரின் உள்ளது. ஆகையால் பல அழகு சாதன பொருட்களில் இந்த திரவத்தை பயன்படுத்துகின்றனர். கிளிசரின் சருமத்தின் ஈரப்பதத்தை சரியான அளவில் பராமரித்து தேவையான அளவு ஊட்டத்தை கொடுக்க முற்படுகின்றது. ஊட்டம் கொடுக்கும் பொருளாக அமைவதற்கு மாய்ஸ்ட்ரைசருடன் கிளிசரினையும் சேர்த்து முகத்தில் பேஸ் பேக் மற்றும் மாஸ்க்காக பயன்படுத்தலாம். கிளிசரினின் ஊட்டமூட்டும் மற்றும் மென்மைப்படுத்தும் பயன்களால் தினசரி இதை பயன்படுத்தும் போது சருமம் ஆரோக்கியமாகவும் புத்துணர்வுடனும் காணப்படும். 

சரும பராமரிப்பு:


 வறண்ட மற்றும் எரிச்சல் உள்ள சருமத்தில் பயன்படுத்தும் மருந்துகளிலும் கிளிசரின் பயன்படுத்தப்படுகிறது. குளிர் மற்றும் மாசுத்தன்மையின் காரணமாக சருமத்தில் சொறி மற்றும் தேமல் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில் கிளிசரினை பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளை தவிர்க்க முடியும். சரும பராமரிப்பு மருந்துகளிலும் இவை முக்கிய அங்கமாக உள்ளன. இதை நாம் தினசரி பயன்படுத்தும் போது சருமம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றது. ஆகையால் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வித்தியாசத்தை காணுங்கள். 

கரும்புள்ளிகளை குறைத்தல்:


 பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் கரும்புள்ளிகளை குறைக்கும் சக்தி கிளிசரினுக்கு உள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும், தினந்தோறும் இதை பயன்படுத்தும் போது சிறந்த பலனை பார்க்க முடியும். கிளிசரினை புள்ளிகள் மற்றும் பருக்கள் இருக்கும் இடத்தில் பஞ்சு கொண்டு தடவினால் அவைகள் மறைந்து விடும். ஆனால் பருக்கள் வெடித்த நிலையில் இருக்கும் போது அதிகம் பயன்படுத்த வேண்டாம். ஆகையால் மேல் கூறிய வகையில் கண்ணீரை உண்டாக்கும் திரவமாக மட்டுமல்லாமல் பல நல்ல குணங்களை கொண்டதாகவும் கிளிசரின் உள்ளது.

More Hot News Click Here...



No comments: