Wednesday, January 8, 2014

கடும் எச்சரிக்கை எதிரொலி... கருணாநிதியைச் சந்தித்தார் மு.க.அழகிரி - www.tnfinds.com - Best site in the world....


கடும் எச்சரிக்கை எதிரொலி... கருணாநிதியைச் சந்தித்தார் மு.க.அழகிரி

சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சித் தலைமையின் கருத்தை மீறி மு.க.அழகிரி கருத்து தெரிவித்தது தவறு, வருத்தத்திற்குரியது, கண்டனத்துக்குரியது. யாராக இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்தால் நீக்கப்படுவார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி விடுத்த கடும் எச்சரிக்கைப் பின்னணியில் இன்று கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

அழகிரி ஆதரவாளர்களால் மதுரை திமுக தற்போது பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அழகிரியின் பிறந்த நாள் வருகிற 30ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் போரில் இறங்கியுள்ளனர். அவர்கள் ஒட்டி வந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பு நிலவிய சூழலில், தேமுதிகவை நான் ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை, விஜயகாந்த்தை தலைவராகவே ஏற்கவில்லை. 

தேமுதிகவை கூட்டணியில் திமுக சேர்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். மேலும் அழகிரி ஆதரவாளர்கள் தயாரித்த, ஒட்டிய போஸ்டர்களும் திமுக தலைமைக்கு எரிச்சலைக் கொடுத்தது. தேமுதிக கூட்டணிக்காக திமுக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அழகிரியின் போக்கு திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்தது. 

இதையடுத்து முதலில் மதுரை மாவட்ட திமுகவை அதிரடியாக கலைத்தார் கருணாநிதி. புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி அழகிரிக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்து, அவரை கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார். 

இந்தச் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று மு.க.அழகிரி நேரில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை. பேச்சுவார்த்தை விவரமும் வெளியிடப்படவில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 

சந்திப்பு முடிந்து வெளியே வந்த அழகிரியும் செய்தியாளர்களிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் போய் விட்டார்.



No comments: