Wednesday, January 8, 2014

5 வயது மகள் முன்பு முன்னாள் வெனிசுலா அழகி, மாஜி கணவர் சுட்டுக் கொலை - www.tnfinds.com - Best site in the world....


5 வயது மகள் முன்பு முன்னாள் வெனிசுலா அழகி, மாஜி கணவர் சுட்டுக் கொலை

முன்னாள் வெனிசுலா அழகி மோனிகா மற்றும் அவரது முன்னாள் கணவர் ஆகியோர் அவர்களின் 5 வயது மகளின் கண் முன்பு கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

 முன்னாள் வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர்(29). அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அவரது முன்னாள் கணவர் தாமஸ் ஹென்ரி பெர்ரி(39). அவர்களுக்கு மாயா பெர்ரி ஸ்பியர்(5) என்ற மகள் உள்ளார். அமெரிக்காவில் வசித்து வந்த மோனிகா தனது முன்னாள் கணவர் மற்றும் மகளுடன் வெனிசுலாவுக்கு சுற்றுலா சென்றார். 

கடந்த திங்கட்கிழமை அன்று அவர்கள் 3 பேரும் மத்திய வெனிசுலாவில் உள்ள பியூர்டோ காபெல்லா மற்றும் வாலன்சியாவுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கார் டயர் கூரான பொருள் மீது பட்டு பழுதாகி நின்றது.

 அந்த சமயத்தில் கொள்ளையர்கள் வந்து மோனிகா மற்றும் பெர்ரியை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் மாயாவின் காலில் குண்டடிபட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாயாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் வேண்டும் என்றே கூரான பொருளை வைத்து காரை பழுதடையச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

வெனிசுலாவில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன நிலையில் மோனிகா கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

More Hot News Click Here...




No comments: