Friday, January 10, 2014

இது உங்கள் இடம் - www.tnfinds.com - Best site in the world...

இது உங்கள் இடம்

'லொள்ளு' தாங்க முடியலை!ஆர்.மயில்சாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அற்பனுக்கு பவிசு வந்தால், அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பானாம். யாருமே எதிர்பார்த்திராத வகையில், டில்லி சட்டசபைத் தேர்தலில், இரண்டாவது இடத்தைப் பிடித்து, இப்போது, காங்., ஆதரவுடன், ஆட்சியையும் அமைத்துள்ள, ஆம் ஆத்மி வாலாக்களின் பேச்சும், நடவடிக்கையும், இப்படித் தான் இருக்கிறது. ஒரு மாநிலம் என்னும் அந்தஸ்து, டில்லிக்கு இருந்தாலும், உண்மையில், அது ஒரு பெருநகரம் தான். டில்லி சட்டசபைக்குத் தேர்தல் என்பது, மாநகராட்சித் தேர்தல் மாதிரி தான். இதைப் புரிந்து கொள்ளாமல், ஆம் ஆத்மி வாலாக்கள், இப்போது, அகலக்கால் வைக்க நினைக்கின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், 300 தொகுதிகளில் போட்டியிடுவராம். 1957ல், சென்னை மாநகராட்சியைப் பிடித்த, தி.மு.க., மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க, பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதை, ஆம் ஆத்மி கட்சிக்கு, யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை. கெஜ்ரிவால், பல்டி அடிப்பதில், கருணாநிதியை மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. 'ஊழல் கட்சிகளான, காங்., மற்றும் பா.ஜ.,வின் ஆதரவை ஏற்க மாட்டோம்' என்று, கெஜ்ரிவால், தன் குழந்தைகள் மீது ஆணையிட்டு சொன்னார். ஆனால், காங்கிரசின் ஆதரவுடன், ஆட்சி அமைத்துள்ளனர். மைனாரிட்டி அரசைக் கூட, பா.ஜ., அமைக்கக் கூடாது என்னும், காங்கிரசின் குரோதம் தான், இந்த ஆதரவுக்கு காரணம். 'அரசு வாகனங்களை பயன்படுத்த மாட்டோம்' என்றனர். இப்போது, 'அரசுப் பணிகளை கவனிப்பதற்காக, வாகனம் தேவைப்படுகிறது' என, கெஜ்ரிவால் அசடு வழிகிறார். ஆளாளுக்கு முரணாகப் பேசுகின்றனர். 'பிரச்னைகளின் அடிப்படையில், பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்போம்' என்றார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுள் ஒருவரான, பிரஷாந்த் பூஷன். 'அது, அவருடைய சொந்தக் கருத்து' என்று கெஜ்ரிவால் சொல்லி, மூக்குடைத்தார். 'கெஜ்ரிவாலை, பிரதமராக்குவதே லட்சியம்' என்கிறார், யோகேந்திர யாதவ். 'எனக்கு அந்த ஆசை இல்லை' என்கிறார், கெஜ்ரிவால். குமார் விஷ்வாஸ் என்பவரோ, அமேதி தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிடுமாறு, ராகுலுக்கும், மோடிக்கும் சவால் விடுகிறார். மிகப்பெரிய கொடுமை என்னவெனில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழகக் கிளைக்கு தலைமையேற்குமாறு, கூடங்குளம் உபத்திரவக்காரர், உதயகுமாரை அணுகியிருக்கின்றனர். ஊடகங்கள், தங்கள் பின்னால் அலைகின்றன என்பதால், இவர்கள் செய்யும், 'லொள்ளு' தாங்க முடியவில்லை. அடக்கி, வாசிக்க வேண்டும்; இல்லையேல், ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள், ஆப்பு வைத்து விடுவர்.

மோடியின் எழுச்சி; பிரதமரின் எரிச்சல்! கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'மோடி பிரதமரானால், நாடு, பல வகைகளிலும் சீர்குலையும்' என்று, பிரதமர் மன்மோகன் சிங், கூறிஉள்ளார். மோடி, தொடர்ந்து, மூன்றாவது முறையாக, குஜராத் முதல்வராக உள்ளார். அம்மாநிலம், இதுவரை, எந்த சீர்குலைவையும் சந்தித்து விடவில்லை. மாறாக, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று, இந்தியாவின், முதன்மையான மாநிலமாக தான், விளங்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில், ஐ.மு.கூ., ஆட்சியின் கடந்த பத்தாண்டு காலத்தில் தான், நாடு, பல வகை சீர்குலைவை சந்தித்து வந்திருக்கிறது. இந்த சீர்குலைவுகளிலிருந்து மீண்டு வர, மக்கள், மோடியை எதிர்பார்க்கின்றனர். 'ஆயிரக்கணக்கானோரை கொன்ற மோடிக்கு, என்னைக் குறை கூற எந்த தகுதியுமில்லை' என்றும், மன்மோகன் கூறியுள்ளார். இது, நிதானம் தவறிய பேச்சு. 'குஜராத் கலவரத்தில், மோடிக்கு பங்கில்லை' என்று, உச்ச நீதிமன்றம் நியமித்த, சிறப்பு விசாரணைக் குழுவும், குஜராத் நீதி மன்றமும் கூறிய பின்னும், பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், இப்படிப்பட்ட வதந்தியை பரப்ப முற்படுவது, அபத்தமானது. அவர், மோடிக்கு ஆதரவான மக்கள் அலையைப் பார்த்து, மிரண்டு போயிருக்கிறார் என்பதையே, இது காட்டுகிறது. மோடி பற்றிய மன்மோகனின் கருத்துகள், மக்கள் மன்றத்தில், சிறிதும் எடுபடப் போவதில்லை. 'குட் பை' மன்மோகன்!

அரசியல்வாதிகளுக்கும் பொருந்துமா? அ.அஷ்ரப் அலி, உளுந்தூர்பேட்டையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், பத்திரிகையில் படித்த, ஒரு செய்தி நம்மை, 'பகீறிட' வைத்தது. சென்னையில் உள்ள, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், வேட்டி கட்டியவர்களுக்கு, 'நோ பர்மிஷன்!' வேட்டி கட்டிய தமிழன் தான், நாளை, நம் நாட்டின் பிரதமராக அமர வேண்டும் என, நடிகர், கமலே சொல்லிக் கொண்டிருக்க, அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் மட்டும், வேட்டி கட்டி இருந்தால், தமிழன் மட்டுமல்ல; தெலுங்கன், மலையாளி, கன்னடியன், வட மாநிலத்தவன், அயல்நாட்டினன் என்று, யாருக்குமே அனுமதி கிடையாதாம். கோட், சூட் மற்றும் பேன்ட், ஷர்ட் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் தான் அனுமதியாம். கேட்டால், அது தான் டிரெஸ் கோடாம். தொல்.திருமா, பரிதி இளம்வழுதி, அன்புமணி, டாக்டர் கிருஷ்ணசாமி போன்று, விரல் விட்டு எண்ணி விடக் கூடிய, ஒரு சில அரசியல்வாதிகளைத் தவிர, ஏனையோர் அனைவரும் அணிவது, வேட்டியும், சட்டையும் தான். வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை என்றால், அரசியல்வாதிகள் அனைவரும் அணிவது, வேட்டியும், சட்டையும் தானே! இந்த டிரெஸ் கோட், அந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் தானே! வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை என்று மறுத்தால், அந்த அரசியல்வாதிகள் 'உனக்கு, இங்கே (தமிழகத்தில் சென்னையில்) ஓட்டல் நடத்த அனுமதி இல்லை' என்று, தொண்டர்களை ஏவி, அந்த ஓட்டலை, உண்டு இல்லை என, நொறுக்கித் தள்ளி விடுவர். ஓட்டல் நிர்வாகம், தன் முடிவை மாற்றி, தமிழகத்தில் ஓட்டல் நடத்தும் போது, தமிழனாக இருந்து, வளைந்து கொடுத்து நடத்தாவிட்டால், அரசியல்வாதிகள், ஓட்டல் நிர்வாகத்திற்கு, சரியான பாடம் கற்று தருவர். பின் புலம்பி, 'நோ யூஸ்!'

More Hot News Click Here...

No comments: