Thursday, January 9, 2014

சொல்கிறார்கள் - www.tnfinds.com - Best site in the world...

சொல்கிறார்கள்

விவசாயிகளுக்கு மாற்று வருமானம்!
உயர்ரக மரம் வளர்ப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கும் காப்பீட்டு வழிகளை கூறும், பேராசிரியர், கா.த.பார்த்திபன்: விவசாயத்திற்கு தேவையான நீர், வேலையாட்கள் குறைபாடு மற்றும் பருவநிலை மாற்றம் என, பல காரணங்களால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். இனி வரும் காலங்களில், விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தர, கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் முயற்சித்தோம்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, உயர் ரக மரங்களை வளர்ப்பது தான், ஒரே வழி என, கண்டுபிடித்தோம். அதன் பயனாக, உயர் ரக மரங்களை எப்படி வளர்ப்பது, அதற்கான தொழில்நுட்பங்கள் என்ன, அம்மரங்களை எப்படி அறுவடை மற்றும் விற்பனை செய்வது போன்ற விவரங்களை, விவசாயிகளுக்கு சொல்லி தருகிறோம்.மேலும், தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகளுக்கான, மதிப்பு கூட்டு சங்கிலி திட்டத்தில், உயர்ரக மரக்கன்றுகளை, நவீன முறையில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்குகிறோம்.'தமிழ்நாடு காகித ஆலை' போன்ற, மரம் சார்ந்த தொழிற்சாலைகளுடன், ஒப்பந்த முறையில் விவசாயிகளை இணைக்கிறோம். இதனால், விவசாயிகள் தங்கள் மரங்களுக்கேற்ற சரியான விலையை, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தொழிற்சாலையிடமிருந்து பெறுகின்றனர்.மேலும், விவசாயிகளுக்கு தரமான மர நாற்றுகள், சிறந்த மரவளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் சந்தை நிலவரம் போன்றவை, சரியான நேரத்தில் கிடைக்கின்றன.மரம் வளர்ப்பின் போது ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், விவசாயிகள் நஷ்டமடைவதை தவிர்க்க, இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு தொகை பெற உதவுகிறோம்.இதற்காக, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவிலேயே முதன் முறையாக, மரக் காப்பீடு செய்துள்ளோம்.அதாவது, 'தானே' புயல் போன்ற இயற்கை சீற்றம், திடீர் தீ விபத்து, வனவிலங்கு, கடும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற இடர்பாடுகளால், மரங்கள் பாதிக்கப்படும் போது ஏற்படும் நஷ்டங்களுக்கு, விவசாயிகள் அதுவரை செலவு செய்த தொகையை, இழப்பீடாக பெற முடியும்.

More Hot News Click Here...

No comments: