Thursday, January 9, 2014

ரயிலில் முதியவர் தவற விட்ட நகைப் பையை.. 3 மணி நேரத்தில் மீட்ட 'சூப்பர்' தூத்துக்குடி போலீஸ்! - www.tnfinds.com - Best site in the world....


ரயிலில் முதியவர் தவற விட்ட நகைப் பையை.. 3 மணி நேரத்தில் மீட்ட 'சூப்பர்' தூத்துக்குடி போலீஸ்!

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை ஒரு முதியவர் தவற விட்டு விட்டார். ஆனால் 3 மணி நேரத்தில் அதை பத்திரமாக மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர் தூத்துக்குடி ரயி்லவே போலீஸார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து. 

இவர் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் மும்பையில் தங்கியிருந்து வருகிறார். சொந்தவேலை காரணமாக மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சுடலைமுத்து இன்று காலை மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்தார். 

மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.35மணிக்கு வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. தனக்குரி. எஸ்.8பெட்டியின் வாசலில் பையை வைத்து விட்டு சுடலைமுத்து ஏறமுயன்றார். ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. இதனால் சுடலைமுத்துவால் ரயிலில் ஏறமுடியவில்லை. பையை ரயிலில் தவறவிட்ட சுடலைமுத்து இதுகுறித்து வள்ளியூர் ரயில் நிலைய அலுவலரிடம் தகவல் தெரிவித்தார்.

 அவர், நெல்லை சென்று ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்குமாறு கூறினார். இதனையடுத்து சுடலைமுத்து வள்ளியூரில் இருந்து காரில் நெல்லை ரயில் நிலையம் வந்தார். ஆனால் அதற்குள் ரயில் நெல்லையை கடந்துவிட்டது. இதுகுறித்த தகவல் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான ரயில்வே போலீசார் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்திற்கு காரில் சென்று மும்பை ரயிலை நிறுத்தி சோதனையிட்டனர். 

அப்போது, எஸ் 8பெட்டியில் சுடலைமுத்துவின் பையை மற்றொரு நபர் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது அவர் அது தனது பை என்று வாதிட்டார். போலீசாரின் அதிரடியான விசாரணையில் அந்த நபர் பை தனக்கில்லை என்பதை ஒத்துக்கொண்டார். பையை மீட்ட தூத்துக்குடி ரயில்வே போலீசார் சுடலைமுத்துவிடம் ஒப்படைத்தனர்.

 அந்த பையில், 78ஆயிரம் ரொக்கப்பணம், 2 செயின், ஒரு மோதிரம் உட்பட 8 பவுன் தங்க நகை, 3 செல்போன் என மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்தது. புகார் தெரிவித்த 3 மணி நேரத்தில் நகைப்பை மீட்க்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.



No comments: