Thursday, January 9, 2014

பேச்சு, பேட்டி, அறிக்கை - www.tnfinds.com - Best site in the world...

பேச்சு, பேட்டி, அறிக்கை

மது வேண்டாம் எனச் சொல்பவர்களை, தன் கட்சிக்கு ஓட்டுப் போடச் சொன்னால், சொந்த கட்சியினர் கூட, ஓட்டு போட மாட்டார்கள் என்பது தெரிந்தும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மது, நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று கூறிக்கொண்டே, மது விற்பனையை, அரசு அமோகமாக நடத்துகிறது. மது வேண்டாம் என சொல்பவர்கள், பா.ம.க.,வுக்கு ஓட்டு போடுங்கள்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார் பேட்டி:லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, அ.தி.மு.க., தலைமையில், பலம் வாய்ந்த கூட்டணியில் உள்ளோம். தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும். முதல்வர் ஜெயலலிதாவை இந்திய பிரதமராக்க, சமத்துவ மக்கள் கட்சியும் இணைந்து பணியாற்றும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர், வேல்முருகன் பேச்சு: தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், வன்னியர் சமுதாயத்தினரையும் மோதவிட்டு, அரசியல் லாபம் தேடுகிறார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். அன்புமணி, மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது, எத்தனை வன்னியர்களுக்கு வேலை வாங்கித் தந்தார்?

வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டி: நான் சமீபத்தில் இலங்கை சென்றபோது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளைப் பார்வையிட்டேன். இந்தியா அளித்த உதவிகள், அங்கு முழுமையாகச் சென்றடையவில்லை. அங்குள்ள மக்கள், இன்னும் அச்சத்துடனும், இறுக்கத்துடனும் வாழ்கின்றனர்.

இருக்கும் ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.,க்களைக் கூட தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல், கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், இன்று ஒரு கட்சிக்கு ஆதரவு, நாளை வேறொரு கட்சிக்கு ஆதரவு என, தினம் ஒரு நாடகம் ஆடும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி: இந்திய அளவில் மாற்றம் வேண்டும் என, ஜெயலலிதா நினைக்கிறார்; பேசுகிறார். தமிழகத்திலேயே, அவரால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாதபோது, எப்படி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க முடியும்?

More Hot News Click Here...

No comments: