Wednesday, January 8, 2014

அறிவியல் ஆயிரம் - www.tnfinds.com - Best site in the world...

அறிவியல் ஆயிரம்

இலுப்பைப் பூ சீசன்.

கோடையில் தான் மலர்கள் அதிகமாக மலரும்.பனிக்காலத்தில் மலரும் பூ, இலுப்பைப்பூ. வட மாநிலங்களில், இலுப்பைப் பூக்கள் அதிக சதைப் பற்று உள்ளவை. இந்தப் பூக்கள் இரவில் மலரும். காட்டில் பழங்குடி மக்களுக்கு பொருளாதாரம் தரும் தொழிலாக இலுப்பைப் பூக்களை சேகரித்தல் உள்ளது. இலுப்பைப் பூக்களில் இருந்து, வட மாநிலங்களில் மதுபானம் காய்ச்சுவர். இலுப்பைக் கொட்டையில் இருந்து, எண்ணெய் எடுப்பர்.பீகார் மாநிலத்தில் புத்த கயாவில் இலுப்பை மரங்கள் அதிகம். பழங்குடியினர், இலுப்பை பூவை இனிப்பாகவும் பயன்படுத்துவர்.

தகவல் சுரங்கம்.

பழமையான சபா.

சென்னை மியூசிக் சபாக்களில், பழமையான சபா, பார்த்தசாரதி சுவாமி சபா. 1900ம் ஆண்டில் மன்னை திருமலைச்சாரியால் தொடங்கப்பட்டது.இந்த சபாவின் சார்பில் சங்கீத கலா சாரதி, நாட்டிய கலா சாரதி, நாடக கலா சாரதி விருதுகள் வழங்கப்படுகின்றன.இது தவிர, சிறந்த வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் இசைக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. நித்யஸ்ரீ, தாத்தாவின் பெயரில் பாலக்காடு மணி அய்யர் நூற்றாண்டு விருதினை ஏற்பாடு செய்துள்ளார். சுதா ரகுநாதன், குருவின் பெயரால் எம்.எல். வசந்தகுமாரி விருதினை ஏற்பாடு செய்துள்ளார்.

More Hot News Click Here..


No comments: