Thursday, January 9, 2014

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் தொடக்க நிலையில் இருக்கிறோம்: இஸ்ரோ தலைவர் - www.tnfinds.com - Best site in the world.....


விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் தொடக்க நிலையில் இருக்கிறோம்: இஸ்ரோ தலைவர்

பெங்களூர்: மனிதனை விண்வெளிக்கு அனிப்பி ஆராயும் விஷயத்தை பொருத்தவரை நாம் தொடக்க நிலையில் இருப்பதாகவும், அதற்கான ஏவுத் திட்டத்திற்கான சோதனை வரும் மார்ச் மாதம் நடத்தப் பட இருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வன சுற்றுச்சூழல் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு, இஸ்ரோ நிகழ்ச்சிகள் குறித்து பெங்களூரில் ஆலோசனை நடத்தியது. 


அப்போது இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராயும் விசயத்தை பொருத்தவரை நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம். அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மனித விண்வெளி ஓடத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு முறைகள் மற்றும் வடிவமைப்பு பற்றிய தேவையான முக்கியமான தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். 

இதுபோன்று நாம் முன் எப்போதும் செய்திருக்கவில்லை. ஆகையால், இதை ஏவுவதற்கு ஏற்ற ஒரு நம்பத்தகுந்த ஏவுவாகனத்தை நாம் உருவாக்க வேண்டும். இதற்கென நாம் முடிவு செய்துள்ள ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ஏவுதிட்டத்திற்காக அரசு 145 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த ஏவுதிட்டத்திற்கான சோதனை, வரும் மார்ச் மாதம் நடத்தப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Hot News Click Here...






No comments: