ஆமாங்க... பிப் 12-ல் எனக்கு திருமணம்!- உறுதிப்படுத்திய மீரா ஜாஸ்மின்
திருவனந்தபுரம்: வரும் பிப்ரவரி 12-ம் தேதி திருமணம் என்று வெளியான தகவல்கள் உண்மைதான் என உறுதிப்படுத்தினார் நடிகை மீரா ஜாஸ்மின். தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின்.
மலையாளத்திலும் தொடர்ந்து முதல் நிலையில் இருந்தார்.
சர்ச்சைகளுக்கு, கிசுகிசுகளுக்குப் பஞ்சமில்லாத நாயகி.
இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது. இதை அவர் மறுக்கவும் இல்லை. புதிய படங்களிலும் அவர் அதிகமாக நடிக்காமலிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டைடஸ் - சுகுதகுமாரி மகன் அனில் ஜான் டைடஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனில் ஜான் துபாயில் கம்ப்யூட்டர் எஞ்ஜினீயராக உள்ளார்.
திருமண தகவல்கள் வெளியானாலும், அது குறித்து மீரா ஜாஸ்மின் எதுவும் சொன்னதில்லை. மவுனம் காத்தார்.
இப்போது முதல்முறையாக அனில் ஜானுடனான திருமண தகவல் உண்மைதான் என்றும் வரும் பிப்ரவரி 12-ம்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் எல்எம்எஸ் சர்ச்சில் திருமணம் நடைபெறுவதையும் உறுதி செய்துள்ளார்.
No comments:
Post a Comment