பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
பாலசோர்: அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான பிரித்வி- 2 இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிஷவின் சந்திப்பூரில் இன்று காலை 9.48 மணியளவில் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்புத்துறையின் ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் இயக்குனர் பிரசாத் தெரிவித்தார். விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் இந்த பிரித்வி -2 ஏவுகணை சுமார் 1000 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் ஆற்றலுடையது. 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.
No comments:
Post a Comment