குப்பையில் கிடந்த ரூபாய் நோட்டுக்கள்: தொடருது மர்மம்
டி.கல்லுப்பட்டி :டி.கல்லுப்பட்டி அருகே கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் குப்பையில் கிடந்த சம்பவத்தில், வருவாய்த்துறை மெத்தனத்தால் மர்மம் தொடர்கிறது.மோதகம் சுப்புலாபுரம் மேற்குத் தெருவில், டிச.,28ல், குப்பைமேட்டில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் கிடப்பதாக சிலார்பட்டி வி.ஏ.ஓ., சக்திவேல், தாசில்தார் சவுந்திரராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அதை கைப்பற்றிய தாசில்தார், அதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
டிச.,28க்கு முன் இரு நாட்களாக, குப்பை மற்றும் சாக்கடையில், கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் கிடந்ததாகவும், நல்ல நோட்டுக்களை சிலர் எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில், டிச.,31 இரவு சக்திவேல், போலீசில் புகார் செய்தார்.ஒரு கிராமத்தில் அசாதாரணமான சம்பவம் நடந்தால், அதுகுறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டியது வி.ஏ.ஓ.,வின் கடமை. ஆனால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் கூறுகையில், "அதிகாரிகளை யாராவது மிரட்டினால் மட்டும் புகார் அளிக்க ஓடி வருகின்றனர். ஆனால், இச்சம்பவத்தில் 2 நாட்களுக்கு பின் புகார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அங்கு பணம் எப்படி வந்தது? 'ரெய்டு' பயத்தால் யாராவது பணத்தை அங்கு போட்டார்களா அல்லது
தீவிரவாத கும்பலுக்கு ஏதும் தொடர்பு உண்டா தொடர்ந்து விசாரிக்கிறோம்" என்றனர்.
No comments:
Post a Comment