சாலையில் கிடந்த 1.15 கோடி ரூபாய்
பாராசத்: மேற்கு வங்கம், கோல்கட்டா, சால்ட் லேக் பகுதியில், சாலையில் ஒரு டிரங்க் பெட்டி கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அவ்வழியாக சென்ற ஒருவர், உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். சந்தேகத்தி்ன் பேரில் போலீசார் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் 1.15 கோடி ரூபாய் பணம் இருந்தது. இந்நிலையில், பெட்டியும், பணமும் தங்களுடையது என ஆக்ஸிஸ் பேங்க் கோரியது. வழக்கமான சோதனைகளுக்கு பின்னர், பேங்க் அதிகாரிகளிடம் பணமும், பெட்டியும் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment