Monday, January 6, 2014

'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க!' - டங் ஸ்லிப்பான ஜீவா Read more at: - www.tnfinds.com - Best Site In The World


'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க!' - டங் ஸ்லிப்பான ஜீவா


தனது பிறந்த நாள் விழாவின் போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா, தவறுதலாக 'எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில படம் பாருங்க' என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது. நடிகர் ஜீவாவுக்கு இன்று முப்பதாவது பிறந்த நாள். தன் பிறந்த நாளையொட்டி 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார்.




இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது. உதவிகள் வழங்கிய பிறகு ஜீவா பேசுகையில், "இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும் அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள். எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும். சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம். அதனால் படங்கள் ஓடணும். அதற்கு நீங்கள் எல்லாம் படத்தை தியேட்டரில் போய் பார்க்கணும். எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில பாருங்க, என்றார் வாய் தவறி. உடனே வந்திருந்தவர்கள் சத்தமாக சிரித்து வைக்க, சாரி, விஜய் - அஜீத் பற்றி பேசினாலே இப்படித்தான் தடுமாறுகிறது. டெலிட் பண்ணிடுங்க, என்றார். மீண்டும் மறக்காம திருட்டு விசிடில படம் பார்க்காதீங்க என்பதற்கு பதில், பாருங்க என்றே தவறுதலாகக் குறிப்பிட்டார். மூன்றாவது முறைதான் திருட்டு விசிடில பார்க்காதீங்க என்றார்.

More Hot News Click Here...



No comments: