Monday, January 6, 2014

'இந்த சண்டை எந்தப் படத்துக்கு எதிராக முடியுமோ?'- கலக்கத்தில் விஜய், அஜீத் - www.tnfinds.com - Best Site In The World


'இந்த சண்டை எந்தப் படத்துக்கு எதிராக முடியுமோ?'- கலக்கத்தில் விஜய், அஜீத்


சென்னை: 


தியேட்டர்களில் பேனர், கட்அவுட் வைப்பதில் விஜய், அஜீத் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது படங்களின் ரிலீசுக்கே வேட்டு வைத்துவிடுமோ என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பதட்டப்படும் அளவுக்குப் போய்விட்டது.

போட்டா போட்டி


 விஜய்யின் ‘ஜில்லா' படமும், அஜீத்தின் ‘வீரம்' படமும் வருகிற 10-ந் தேதி ஒரே நாளில் ரிலீசாகின்றன. இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்போதே தியேட்டர்களிலும், சுவர்களிலும் இடம் பிடிக்கத் துவங்கியுள்ளனர்.

மதுரையில்...


 மதுரையில் இரு தரப்பு ரசிகர்களும், ஜில்லா, வீரம் படங்கள் பற்றி சுவர் விளம்பரம் செய்த போது தகராறில் ஈடுபட்டனர். சேலத்திலும் இது போல் மோதல் நடந்துள்ளது. சென்னையிலும் தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் போட்டி நிலவுகிறது.

திருவள்ளூர் - காஞ்சியில்


 திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்களிலும் பேனர் வைப்பதில் அஜீத், விஜய் ரசிகர்களின் மோதல் தீவிரமடைந்து வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்யாமல் அமைதியாக நிற்கின்றனர்.


போலீஸ் உத்தரவு




 ரசிகர் மன்றத்தினரின் இதுபோன்ற செயல்களால்தான், ஏற்கெனவே ஜில்லா படத்தின் பேனர்கள், கட் அவுட்டுகளை வைக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர் போலீசார்.

ஏதாவது ஒரு படத்தை மட்டும்...


 ரசிகர்களின் மோதல்கள் அதிகமானால் இரண்டு படங்களுக்குமே இந்த மாதிரி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், ஏதாவது ஒரு படத்தை நிறுத்தி, இரு வாரங்கள் கழித்து வெளியிடுமாறு கூறப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இது அஜீத், விஜய் இரு தரப்புக்குமே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.


More Hot News Click Here...










No comments: