அ.தி.மு.க.,வை கிறங்கடிக்கும் தே.மு.தி.க.,!
''ஆதரவாளர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்கும் வகையில, ராஜினாமா அஸ்திரத்தை எடுக்க, ஆலோசனை நடத்தியிருக்காரு வே...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க... தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலர், அழகிரியை சொல்றீங்களா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''ஆமாம் வே... ஆதரவாளருங்க, 165 பேரோட பதவிகளை, கட்சித் தலைமை பறிச்சப்பறம், சென்னையில உள்ள, தன் மகன் தயாநிதி வீட்டுல தான், அழகிரி தங்கி இருக்காரு... தயாநிதியும், அப்பாவோட தர்மசங்கடத்தைத் தீர்க்குமாறு, திருப்பதி வெங்கடாஜலபதியிடம் வேண்டிக்க, அங்கே போய்ட்டு வந்தாரு...
''தன்னோட அடுத்த கட்ட நடவடிக்கையா, எம்.பி., பதவியையும், கட்சியில், அமைப்பு செயலர் பதவியையும் ராஜினாமா செய்யலாமான்னு, அழகிரி, நெருங்கிய வட்டாரத்தோட ஆலோசனை நடத்தினாரு வே... ஆதரவாளருங்களோ, 'உங்க பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சப்பறமா, நல்ல முடிவு எடுக்கலாம்'ன்னு, இப்போதைக்கு, முடிவை ஒத்தி வைச்சிருக்காவ வே...'' எனக் கூறி முடித்தார் அண்ணாச்சி.
''சரியா எட்டு போட்டு காட்டியும், லைசென்ஸ் வாங்க முடியாம, தவிச்சிண்டு இருக்கா ஓய்... '' என, அடுத்த மேட்டருக்குத் தாவினார், குப்பண்ணா.
''கொஞ்சம் புரியும் படியா சொல்லும் வே...'' என, இடைமறித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''தென் சென்னை பகுதியில, ஸ்மார்ட் கார்டு, ஸ்டாக் இல்லை ஓய்... அதனால, லைசென்ஸ் வாங்க விண்ணப்பித்து, விதிப்படி வாகனங்களை ஓட்டிக் காட்டியும், ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல, லைசென்ஸ் வினியோகிக்க முடியாம திணறிண்டு இருக்கா...'' என்ற, குப்பண்ணாவை இடைமறித்த அண்ணாச்சி, ''என்னவே, ஸ்மார்ட் காடு அது இதுன்னு சொல்லுதீரு... விவரமா சொல்லும்...'' என்றார்.
''மாநிலத்துலேயே, சிவகங்கை, கடலூர், தென்சென்னை ஆகிய மூன்று இடங்கள்ல தான், ஸ்மார்ட் கார்டா தரா...
''இத்திட்டத்தை, மாநிலம் முழுசும் நடைமுறைப்படுத்தணும்னு சொல்ற நேரத்துல, இப்படி, ஸ்டாக் இல்லாம, திட்டம் முடங்கிக் கிடக்கேன்னு பயனாளிகள், புலம்பறா... சரியா எட்டு போட்டு காட்டியும், லைசென்ஸ் கிடைக்க மாட்டேங்கறதேன்னு,அவாளுக்கு வருத்தம் ஓய்...'' என விவரித்தார், குப்பண்ணா.
''மதுரையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில், அரசு விழாவை நடத்தாமல், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., தொகுதியில் நடத்தினதை, அ.தி.மு.க.,காரங்க, ஆச்சரியத்துடன் பார்க்குறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.
''என்ன விழா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள் வழங்கும் விழா, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனின், மதுரை மத்திய தொகுதியில் நடந்துச்சு பா... அவரும், முதல் ஆளா நிகழ்ச்சிக்கு வந்து, அமைச்சர் செல்லூர் ராஜு வரும் வரை காத்திருந்தாரு... அவர் வந்ததும் பேச ஆரம்பிச்சவரு, 'அவன் சொல்றான்... இவன் சொல்றான்னு, வர்ற தேர்தல்ல, ஓட்டுகளை சீரழிச்சிராதீங்க'ன்னு, சுந்தர்ராஜன் பேசப் பேச, 'போற போக்க பார்த்தா, நம்மளையே மிஞ்சிவிடுவாரு போலிருக்கு' என, கட்சி நிர்வாகிகள் பீதியாயிட்டாங்க பா...'' எனக் கூறிச் சிரித்தார் அன்வர்பாய்.டீ குடித்து முடித்து, கிளாசை நாயரிடம் கொடுத்த நண்பர்கள், கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!

No comments:
Post a Comment