விஜய்யின் ‘ஜில்லா’ படத்துக்கு ‘யு’ சான்று - www.tnfinds.com - Best Site in the World
விஜய்யின் ‘ஜில்லா’ படத்துக்கு ‘யு’ சான்று
விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள ‘ஜில்லா’ படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழு உறுப்பினர்கள் இப்படத்தை பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய கமர்சியல் படம் என்றும் தணிக்கை உறுப்பினர்கள் பாராட்டி உள்ளனர்.
இதையடுத்து ‘ஜில்லா’ படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளன. வருகிற 10–ந்தேதி தமிழகம் முழுவதும் 600 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. கேரளாவில் 300 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. வெளிநாடுகளிலும், 600 தியேட்டர்களுக்கு மேலாக திரையிடப்படுகிறது.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஆர்.டி.நேசன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர். பி.சவுத்ரி தயாரித்து உள்ளார்.
அஜீத்தின் ‘வீரம்’ படமும் இதேநாளில் ரிலீசாகிறது. இதில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ளார்.
No comments:
Post a Comment