சென்னையின் 5 புகழ்பெற்ற ஷாப்பிங் மால்கள்!
சென்னை
மாநகரம் மதராஸ் மாகாணமாக அறியப்பட்டு வந்த காலத்தில், அதாவது 1864-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஸ்பென்சர் பிளாசா வளாகமே சென்னையின் முதல் ஷாப்பிங் மாலாகும்.
அதன் பிறகு 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு எண்ணற்ற ஷாப்பிங் மால்கள் சென்னை மாநகரத்தில் புதிது புதிதாக முளைக்க துவங்கின.
அந்த வகையில் இன்று ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, எக்ஸ்பிரஸ் அவென்யூ என்று 15-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் மால்கள் சென்னையில் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் 5 ஷாப்பிங் மால்கள் குறித்து இப்போது காண்போம்.
ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி
24,00,000 சதுர அடி பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக அறியப்படுகிறது ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ஷாப்பிங் மால் வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி அருகே அமைந்திருக்கிறது. இங்கு 30 அறைகளை கொண்ட போட்டிக் ஹோட்டல் ஒன்றும், ஒரு ஏம்பி தியேட்டரும், 300 விற்பனைகூடங்களும் அமைந்திருக்கின்றன.
எக்ஸ்பிரஸ் அவென்யூ
முன்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட விசாலமான இடத்தில் கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் அவென்யூ 2010-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. 15,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஷாப்பிங் மாலில் பல்வேறு சர்வதேச பிராண்டுகளின் விற்பனையகங்கள், ஃபன் சிட்டி எனப்படும் குழந்தைகள் விளையாட்டரங்கம், எண்ணற்ற உணவகங்கள், 8 திரைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கம் போன்றவை அமையப்பெற்றுள்ளன. மேலும் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கேமிங் ஆர்க்கேட் எனப்படும் பொழுதுபோக்கு மையம் இந்த வளாகத்தில் உள்ளது.
No comments:
Post a Comment